தண்ணீர் கேனால் மிகப்பெரிய ஆபத்து; FSSAI அதிர்ச்சி எச்சரிக்கை..! 



FSSAI Warning about Water Bottle to Buy in Shops 


இன்றளவில் நெடுந்தூர பயணங்கள் மற்றும் பிற காரணங்களால், தண்ணீர் கேனில் நீர் குடிப்பது பழகிவிட்டது. பலரும் கடைகளில் விற்பனை செய்யப்படும் பாட்டில் கேன்களில் இருக்கும் நீரை வாங்கி தாகத்திற்காக பருகுகின்றனர். 

உடல்நலன் பாதிப்பு

இவ்வாறான கேன் தண்ணீரின் சுகாதாரம் பல கேள்விகளை எழுப்பினாலும், தாகத்திற்கு மத்தியில் அதனை யாரும் பொருட்படுத்தவில்லை. அதேபோல, பெரு நிறுவனங்களின் பெயரில் போலியான நிறுவனங்கள் பலவும் தண்ணீரை விநியோகம் செய்து மக்களின் உயிர் மற்றும் உடல் நலனுக்கு கேடுகளை விளைவிக்கிறது. 

உணவுத்தரக்கட்டுப்பாடு அமைப்பு எச்சரிக்கை

இதனிடையே, நாம் தினசரி பயன்படுத்தும் தண்ணீர் கேனில் அடைக்கப்பட்டுள்ள நீரானது பாதுகாப்பு இல்லாதது, அதிக கவனம் எடுத்துக் கொள்ள வேண்டிய விஷயம் என மத்திய உணவு பாதுகாப்பு துறை அறிவித்துள்ளது. எஃப்எஸ்எஸ்ஏஐ எனப்படும் மத்திய அரசின் உணவுத்தரக்கட்டுப்பாடு  நிறுவனம், மினரல் வாட்டர் மற்றும் பாட்டில் தண்ணீர் ஆகியவை அதிக எச்சரிக்கை கொண்டு, கவனமாக இருக்க வேண்டிய உணவு வகைகளில் சேர்த்து இருக்கிறது. 

இதையும் படிங்க: டிசம்பர் சம்பவத்துக்கு ரெடியா மக்களே? உறுதி செய்தது இந்திய வானிலை ஆய்வு மையம்.! 

வீட்டில் இருந்து எடுத்துச்செல்லுங்கள்

தண்ணீர் கேனில் நீர் பேக்கிங் செய்யப்படும், போது ஒரு சிறிய கவனக் குறைவு தவறும் நீரின் சுகாதாரத்தை பாதித்து, அது பயனாளரின் உடல் நலனை வெகுவாக பாதிக்கும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. வீடுகளில் இருந்து வெளியே செல்வோர், தண்ணீர் பாட்டிலில் தங்களின் வீடுகளில் இருக்கும் நீரை சேகரித்து எடுத்துச் செல்வது நல்லது. இயலாத பட்சத்திற்கு மட்டுமே தண்ணீர் பாட்டிலை வழியின்றி பயன்டுத்த வேண்டும்.

இதையும் படிங்க: கோவை உணவுத் திருவிழாவால் களேபரம்; கழுவி ஊத்தும் பொதுமக்கள்..!