#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
கஞ்சா, வழிப்பறிக்கு எதிராக குரல் கொடுத்த தொண்டு நிறுவன உரிமையாளர்.. வெட்டி சாய்த்த மர்ம கும்பல்.. போலீசார் வலைவீச்சு..!
திருச்செந்தூர் அருகே தொண்டு நிறுவன உரிமையாளரான பாலகுமரேசன் என்பவரை மர்ம கும்பல் ஒன்று கொடூரமாக வெட்டி சாய்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆறுமுகநேரியை சேர்ந்த பாலகுமரேசன் என்பவர் ஆதவா என்ற பெயரில் தொண்டு நிறுவனமும், பால் பண்ணை மற்றும் ரெஸ்டாரண்ட் போன்றவை நடத்தி வருகிறார். இந்நிலையில் ஆறுமுகநேரியில் கஞ்சா, வழிப்பறி, திருட்டு போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருவதை கண்டித்து அப்பகுதி மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து இந்தப் போராட்டத்தை பாலகுமரேசன் உட்பட பலர் முன்னெடுத்து வழிநடத்திச் சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று ஆதவா ரெஸ்டாரண்டில் பாலகுமரேசன் தனியாக இருந்த போது அங்கு வந்த மர்ம கும்பல் அறிவாளை காட்டி மிரட்டி பாலகுமாரேசனை சரமாரியாக வெட்டி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.
இதனையடுத்து இச்சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கவே தகவலின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் பாலகுமாரேசனை தாக்கிய மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.