தேவாலயம் முன்பாக கொட்டப்பட்ட குப்பைகள்.. தட்டிக்கேட்ட பாதிரியாரை சரமாரியாக தாக்கிய அரசியல் பிரமுகர்..!



garbage-dumped-in-front-of-the-churchpolitician-attacke

கடலூர் மாவட்டத்தில் தேவாலய முன்பாக குப்பைகள் கொட்டப்பட்டதை எதிர்த்து தட்டிக்கேட்ட பாதிரியாரை மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் முதுநகர் பகுதியில் உள்ள தூய கிறிஸ்தவநாதன் தேவாலயத்தில் சில தினங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பரிமாறப்பட்ட உணவுகள், இலைகள் மற்றும் தட்டுகள் பல்வேறு இடங்களில் கொட்டப்படுவதாக 42 வது வார்டு கவுன்சிலர் விஜயட்சுமியின் கணவர் செந்திலுக்கு புகார் வந்துள்ளது. இதனையடுத்து புகாரின் உத்தரவின்படி மாநகராட்சி ஊழியர்கள் குப்பைகளை மீண்டும் சேகரித்து எடுத்து வந்து தேவாலயம் முன்பாக கொட்டியுள்ளனர்.

இந்நிலையில் தேவாலயம் முன்பாக குப்பைகளை கொட்டிய செய்தியானது  பாதிரியார் பிலிப் ரிச்சர்ட் காதிற்கு செல்லவே அவர் அலைபேசி மூலமாக கவுன்சிலர் விஜயலட்சுமியின் கணவர் செந்திலிடம் பேசி உள்ளார். அப்போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படவே ஆத்திரம் அடைந்த செந்தில் தேவாலயத்துக்கு நேரடியாக சென்று பாதிரியாரை கடுமையாக தாக்கியுள்ளார்.

Garbage dumped

இதனையடுத்து பாதிரியார் தாக்கப்பட்ட சம்பவம் அறிந்த தேவாலயத்தை சேர்ந்தவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் இந்த சம்பவம் அறிந்து அங்கு வந்த போலீசார் மாநகராட்சி கவுன்சிலரின் கணவர் செந்திலை கைது செய்து 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.