திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஜவுளிக்கடை உரிமையாளர்.. போக்சோவில் கைது..!
சென்னை மயிலாப்பூர் பகுதியில் வசித்து வருபவர் 48 வயது நிரம்பிய ராஜேஷ். இவர் அதே பகுதியில் ஜவுளி கடை ஒன்று வைத்து நடத்தி வருகிறார். இந்த ஜவுளி கடையில் பாலவாக்கத்தை சேர்ந்த சிறுமி ஒருவர் தனது குடும்ப சூழ்நிலையியின் காரணமாக விற்பனை பிரிவில் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்நிலையில் பணிக்கு சென்று வீடு திரும்பிய சிறுமி மிகவும் சோர்வுற்று காணப்பட்டுள்ளார். மேலும் இவரது உடல்நிலை நாளுக்கு நாள் மோசமாகி கொண்டே சென்றுள்ளது. இதனால் சிறுமியின் பெற்றோர் அவரிடம் விசாரித்தபோது சிறுமி பணிபுரியும் ஜவுளிக்கடை உரிமையாளர் அடிக்கடி சிறுமியுடன் பாலியல் உறவு வைத்தது தெரியவந்தது.
இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் உடனடியாக போலீசில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் ஜவுளி கடை உரிமையாளரை போக்சோவில் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.