மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கண்டம் தாண்டிய காதல்: தமிழக கலாச்சாரம் மற்றும் குடும்ப அமைப்பால் ஈர்க்கப்பட்ட ஜெர்மன் வாலிபர்..!
கன்னியாகுமரி மாவட்டம், ராஜாவூர் பகுதியை சேர்ந்தவர் சேர்ந்தவர் லாசர். இவரது மனைவி மரிய செல்வி. இந்த தம்பதியினருக்கு அனீஸ், அருண் என்ற 2 மகன்களும், அனு விண்ணிமேரி என்ற மகளும் உள்ளனர். இந்த நிலையில், பட்டதாரியான அனு விண்ணிமேரி மேற்படிப்புக்காக ஜெர்மனிக்கு சென்றார்.
ஜெர்மனியில் உள்ள பவேரியா மாகாணத்தில் இயங்கிவரும் ஜூலியஸ் மேக்சி மிலன் பல்கலைக்கழகத்தில் பயோ பிசிக்ஸ் துறையில் படித்தார். இதன் பின்னர் மேற்படிப்பை முடித்த அனு விண்ணிமேரி, ஜெர்மனியில் உள்ள ஒரு ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றினார். அங்கு அதே பகுதியை சேர்ந்த பேட்ரிக் சிக்பிரிட் கோடல்(31) என்பவரும் அந்த னிறுவனத்தில் பணியாற்றினார்.
அப்போது, இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. முதலில் நண்பர்களாக பழகிய இருவருக்குள்ளூம் நாளடைவில் காதல் மலர்ந்தது. இதனைத் தொடர்ந்து அனு விண்ணிமேரி, பேட்ரிக் உடனான தனது காதல் குறித்து தனது பெற்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் ம்களின் காதலுக்கு சம்மதம் தெரிவித்தனர்.
இதனை அடுத்து, ஜெர்மனி நாட்டை சேர்ந்த மணமகன் பேட்ரிக் சிக்பிரிட் கோடல், தனது தந்தை மற்றும் நண்பர்களுடன் கன்னியாகுமரி மாவட்டம் ராஜாவூருக்கு வந்தார்.இதன் பின்னர் முகூர்த்தநாளான நேற்று முன்தினம் , இரு வீட்டார் மற்றும் உற்றார், உறவினர்கள் சூழ ராஜாவூர் புனித மைக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி திருமணம் நடந்தது. திருமணத்தின்போது மணமகன் பேட்ரிக் மணமகள் அனு விண்ணிமேரிக்கு தாலி அணிவித்தார்.