மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆன்லைன் விளையாட்டால் ஏற்பட்ட பழக்கம்.! 10ஆம் வகுப்பு சிறுமிக்கு அரங்கேறிய கொடூரம்.! பகீர் சம்பவம்!!
ஆவடி அடுத்த திருமுல்லைவாயல் பகுதியில் வசித்து வந்த 10ம் வகுப்பு மாணவிக்கு LUDO ஆன்லைன் விளையாட்டின் மூலம் சென்னை திருவெற்றியூரை சேர்ந்த டிப்ளமோ EEE பட்டதாரியான விக்னேஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நெருக்கமாகவே இருவரும் செல்போன் எண்ணை பகிர்ந்து கொண்டு தொடர்ந்து பேசி வந்துள்ளனர்.
பின்னர் அது நாளைடைவில் ஆபாச உரையாடலாக மாறியுள்ளது. இந்நிலையில் விக்னேஷ் அந்த உரையாடலை வைத்து பள்ளி சிறுமியை மிரட்டி நிர்வாணமாக வீடியோ காலில் பேச வற்புறுத்தியுள்ளார். மேலும் அந்த சிறுமியும் பயந்து அவர் சொன்னவாறே செய்த நிலையில், அதனையும் வீடியோவாக எடுத்து வைத்துள்ளார். பின்னர் ஒருநாள் அந்த சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது வீட்டிற்கு சென்று சிறுமியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒரு நாள் அந்த சிறுமியின் செல்போனை அவரது பெற்றோர் எடுத்து பார்த்துள்ளனர். அப்பொழுது விக்னேஷ் அனுப்பிய மெசேஜை கண்டு பேரதிர்ச்சி அடைந்துள்ளனர். இதுகுறித்து கேட்டபோது நடந்த அனைத்தையும் சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார். பின்னர் அவர்கள் விக்னேஷை தொடர்பு கொண்டு பேசியபோது, சிறுமியின் வீடியோக்கள் நிறைய தன்னிடம் இருப்பதாகவும், ஒரு வீடியோவிற்கு 25 ஆயிரம் என 50 லட்சம் பணம் தர வேண்டும் இல்லையெனில் வீடியோவை இணையத்தில் வெளியிட்டுவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோர்
ஆவடி மாநகர துணை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்த நிலையில், மொபைல் எண்ணை வைத்து விக்னேஷை கைது செய்துள்ளனர். ஆன்லைன் விளையாட்டின் மூலம் இளைஞரை நம்பி சிறுமிக்கு நேர்ந்த துயரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.