மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
நள்ளிரவில் பேருந்து நிலையத்தில் தனியாக நின்ற சிறுமி.! விசாரணையில் வெளிவந்த தகவலால் அதிர்ச்சியில் போலீசார்!!
திருப்பூர் பகுதியில் வசித்து வரும் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவர் சமீபத்தில் நள்ளிரவில் திண்டுக்கல் பேருந்து நிலையத்தில் தனியாக நின்றுகொண்டு இருந்துள்ளார். இந்நிலையில் அங்குள்ள சில நபர்கள் சிறுமிக்கு ஆபாச சைகைகள் காட்டி பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இதனை கண்ட மற்றொரு நபர் அவரை காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். அதனை தொடர்ந்து போலீசார் அந்த சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அதில் அந்த சிறுமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரயிலில் பயணம் செய்தபோது திண்டுக்கல்லை சேர்ந்த இளைஞர் ஒருவருடன் பழகி உள்ளார். நாளடைவில் இவர்களது பழக்கம் காதலாக மாறியுள்ளது. இந்த விவகாரம் சிறுமியின் பெற்றோருக்கு தெரிய வந்த நிலையில், அவர்கள் அவரை கண்டித்துள்ளனர்.
ஆனால் அவர்களது பேச்சை கேட்காத சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த இளைஞரை வற்புறுத்தி வந்துள்ளார். இந்நிலையில் ஆண்ட இளைஞர் சிறுமியை திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வர சொல்லியுள்ளார். அவரும் அங்கு வந்த நிலையில், அந்த இளைஞர் அவரை அங்கேயே நிற்க சொல்லிவிட்டு, தனது பெற்றோரிடம் சம்மதம் வாங்கி வருகிறேன் என கூறிவிட்டு சென்றுள்ளார்.
ஆனால் வெகு நேரமாகியும் அவர் வரவில்லை என தெரியவந்தது.
இதனை தொடர்ந்து போலீசார் அந்த இளைஞரின் செல்போன் எண்ணை வைத்து அவரை கண்டுபிடிக்க தீவிர நடத்தி வருகின்றனர்.