திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பிரசவவலியால் துடிதுடித்து கதறிய கர்ப்பிணி பெண்! கண்டுகொள்ளாத மருத்துவர்கள்! வெளியான பகீர் வீடியோ!!
கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை பகுதியை சேர்ந்த ரியாஸின் மனைவி சமீனா. அவர் கருவுற்றிந்த நிலையில் நேற்று சமீனாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அவரது கணவர் மற்றும் குடும்பத்தினர் அவரை பிரசவத்திற்காக அதே பகுதியில் உள்ள அரசு மகப்பேறு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஸ்கேன் எடுக்க கூறி அனுப்பியுள்ளனர். பின்னர் ஸ்கேன் எடுத்துவிட்டு அவர்கள் திரும்பியநிலையில் சமீனாவை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் யாரும் கண்டுகொள்ளாமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.
இந்நிலையில் 4 மணி நேரமாக மருத்துவருக்காக காத்திருந்த நிலையில் மருத்துவமனையின் வராண்டாவில் அமர்த்திருந்தவாறே பிரசவ வலியால் துடிதுடித்துள்ளார் .
அதனை தொடந்து யாரும் வராதநிலையில் சமீனாவின் குடும்பத்தார்கள் அவரை கோலார் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். அவருக்கு அங்கு அவருக்கு காலம் தாழ்த்தி கொண்டு சென்றதால் குழந்தை இறந்தே பிறந்துள்ளது.
இந்நிலையில் மருத்துவர்களின் அலட்சியத்தால்தான் குழந்தை இறந்தது என அவரது உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில். மருத்துவமனையில் சமீனா பிரசவ வலியால் துடிதுடித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனை கண்ட அனைவரும் மருத்துவர்களுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
Absolutely appalling incident in Kolar: shocking video of woman writhing in labor pain, hospital staff and doctors remain apathetic as she was made to wait for 4 hours!! pic.twitter.com/q7gWC9CNfn
— Nimi (@nimeshika_j) 29 May 2019