மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
ஆசைஆசையாக ஹோட்டலில் பாஸ்தா சாப்பிட்ட இளம்பெண்.! நள்ளிரவில் நேர்ந்த துயரம்.! நடந்தது என்ன??
விழுப்புரம் மாவட்டம் அன்னியூரில் வசித்து வந்தவர் விஜயகுமார். அவர் அதே பகுதியை சேர்ந்த பிரதீபா என்பவரை காதலித்து வந்துள்ளார். ஆனால் இவர்களது காதலுக்கு இரு வீட்டாருமே எதிர்ப்பு தெரிவித்த நிலையில், விஜயகுமார் மற்றும் பிரதீபா இருவரும் கடந்த மாதம் 13 ஆம் தேதி பெற்றோரை எதிர்த்து திருமணம் செய்துகொண்டுள்ளனர்.
இந்த நிலையில், அந்த தம்பதியினர் நேற்று நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளனர். அப்பொழுது இருவரும் திருவாமாத்தூர் விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள உணவகம் ஒன்றிற்கு சாப்பிட சென்றுள்ளனர். அங்கு பிரதீபா ஒயிட் பாஸ்தா சாப்பிட்டதாக கூறப்படுகிறது. பின்னர் வீடு திரும்பிய அவர்கள் தூங்க சென்றுள்ளனர். இந்த நிலையில் நள்ளிரவில் பிரதீபா வாந்தி எடுத்துள்ளார். அதனால் பதறி போன விஜயகுமார் உடனே அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.
ஏற்கனவே ப்ரதீபாவிற்கு இதய பிரச்சனைகள் இருந்து, அவர் அதற்காக மாத்திரை சாப்பிட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் திடீர் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரதீபா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் அவரது கணவர் விஜயகுமார் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பிரதீபாவின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். திருமணமான ஒரே மாதத்தில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.