3 நாட்களில் ரூ.127.64 கோடி.. கங்குவா திரைப்படத்தின் நிலவரம்.!
அந்த வீடியோவில் பேசியது ஸ்ரீமதி இல்லை நான் தான்..! வீடியோ வைரலான நிலையில் மாணவி விளக்கம்.!
கள்ளக்குறிச்சியில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வந்த ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமூக ஊடகங்களில் இறந்த கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி பள்ளியில் நடந்த விழாவில் பேசுவதாக ஒரு காணொளி பகிரப்பட்டு வருகிறது.
அதில் அந்த மாணவி காமராஜர் குறித்து ஒரு சிறிய காணொளியில் பேசியுள்ளார். அதை ஸ்ரீமதி என்று பலர் சமூக ஊடகங்களில் பரப்பி வருகின்றனர். அந்த பதிவிற்கு ஏராளமான கருத்துக்களும் பதிவிடப்பட்டு வந்தது. ஆனால் அந்த வீடியோவில் பேசியது ஸ்ரீமதி இல்லை என்பதும் அந்த வீடியோவில் பேசியது கோவையை சேர்ந்த பவதாரணி என்பதும் தெரியவந்துள்ளது.
இதுகுறித்து பவதாரணி அளித்த பேட்டியில், எனது காணொளியை ஸ்ரீமதி என்று சிலர் பரப்பி வருகின்றனர். தவறான காணொளிகளை பரப்ப வேண்டாம். இது என் நண்பர்களுக்கும் குடும்பத்தாருக்கும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. எந்தவொரு காணொளியாக இருந்தாலும் சரி, அதில் இருக்கும் உண்மை தன்மையை ஆராய்ந்து பார்த்துவிட்டு பகிருங்கள் என கேட்டு கொள்வதாக தெரிவித்துள்ளார்.