மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
செல்போனில் பேசிக்கொண்டிருந்த மாணவிக்கு நேர்ந்த பயங்கரம்.! துடிதுடித்து கதறிய பெற்றோர்கள்!!
சென்னை அயனாவரம் வடக்கு மாடவீதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் ராம். இவரது மகள் தீபிகா.
16 வயது நிறைந்த இவர் நேற்று இரவு 3 வது மாடியிலிருந்து செல்போனில் பேசி கொண்டு இருந்துள்ளார். அப்பொழுது இருட்டில் நிலை தடுமாறிய அவர் மாடியிலிருந்து கீழே விழுந்தார்.
இதனால் தீபிகா தலையில் பயங்கரமாக அடிபட்டு ரத்தவெள்ளத்தில் மிதந்துள்ளார். இதனை உண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து பெற்றோரிடம் விசாரித்து வருகின்றனர் . மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது