திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
லவ் டுடே படம் போல் செல்போனை மாற்றியதால் நடந்த விபரீதம்...
சேலம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஆம்புலன்ஸ் ஓட்டுனராக பணிபுரிந்து வந்துள்ளார் அரவிந்த் (24). இவர் அதே மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றும் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்த நிலையில் இருவருக்கும் பெற்றோரின் சம்மதத்துடன் நிச்சயதார்த்தமும் நடந்துள்ளது.
அதனையடுத்து காதலர்கள் இருவரும் நமக்கு தான் நிச்சயதார்த்தம் முடிந்து விட்டதே என கூறி தங்களது அன்பை பரிமாறும் விதமாக காதலர்கள் இருவரும் லவ் டுடே படம் போல் செல்போனை மாற்றிக் கொண்டுள்ளனர். காதலனின் செல்போனை பார்த்த காதலிக்கு பயங்கர அதிர்ச்சி ஏற்பட்டது.
காரணம் காதலனின் செல்போனில் பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருடன் ஆசை வார்த்தைகளை பேசியது மட்டுமின்றி அந்த மாணவியை அரை நிர்வாணமாக வீடியோ காலில் பேச செய்து அதனை தனது போனில் பதிவு செய்து வைத்துள்ளார். உடனே இச்சம்பவம் குறித்து குறித்த மாணவியின் பெற்றோருக்கு தகவல் கொடுத்துள்ளார் காதலி.
இச்சம்பவம் குறித்து அந்த மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுக்கவே போலீசார் அரவிந்த்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.