திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
பாலியல் தொல்லை கொடுத்தவனை, கல்லால் அடித்து ஓடவிட்ட சிறுமி.. வெடவெடத்துப்போன காமுகன்.. தரமான சம்பவம்.!
12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுக்க முயன்ற இளைஞரை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகாமையில் உள்ள கிராமத்தில் வசித்து வருபவர் திருநாவுக்கரசு. இவர் ஒரு கூலி தொழிலாளி ஆவார். கடந்த புதன்கிழமை அன்று மாலைவேளையில் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்தபோது, 7ஆம் வகுப்பு பயிலும் மாணவியான 12 வயது சிறுமி, அங்கு மாடுகளை ஓட்டிக் கொண்டு மேய்ச்சலுக்காக வந்துள்ளார்.
இதனை கண்ட திருநாவுக்கரசு சிறுமியிடம் தனக்கு ஒரு பொருள் தேவை, அதை எடுத்து தருமாறு கூறி அழைத்துள்ளார். இதனையடுத்து அவன் கூறுவதை உண்மை என நம்பிய சிறுமி, பொருளை எடுத்து தர சென்றுள்ளார். ஆனால், அந்த நயவஞ்சகனோ சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்வதற்காக முயன்றுள்ளான். இதனால் அதிர்ச்சி அடைந்த சிறுமி, கீழே இருந்த கற்களை எடுத்து அவன் மீது வீசி தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளார்.
மேலும், வீட்டிற்கு சென்று நடந்தவற்றை தனது உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்ட மாணவியின் பெற்றோர் இந்த விஷயம் தொடர்பாக செஞ்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின் பேரில் போலீசார் திருநாவுக்கரசரின் மீது வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.