திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
இன்ஸ்டாகிராம் மூலம் காதல்.. பள்ளி மாணவியை கடத்தி பாலியல் பலாத்காரம்!
![Girl kidnapped and harassment in seyyar](https://cdn.tamilspark.com/large/large_girl-harass-63774.jpg)
செய்யாறு அருகே பள்ளி மாணவியை கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 16 வயது மாணவி, அதே பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்த மாணவி பெற்றோர் மற்றும் தம்பி தங்கையுடன் வசித்து வந்த நிலையில், மனைவியின் தாயார் அவரது சொந்த கிராமத்திற்கு குடும்பத்துடன் சென்றுள்ளார். இந்த நிலையில் கடந்த ஜனவரி 17ஆம் தேதி மாணவி திடீரென காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து மாணவியின் பெற்றோர் அனக்காவூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
அந்த விசாரணையில் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கதிரவன் என்ற இளைஞர் இன்ஸ்டாகிராம் மூலம் மாணவியை காதலித்து வந்தது தெரிய வந்தது. இதனையடுத்து மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
இதனையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த கதிரவனை கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.