மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மனைவியுடன் இலைஅறுக்க சென்றவருக்கு, பெண்ணால் நேர்ந்த விபரீதம்! வெளியான பகீர் காரணம்!
தேனி மாவட்டம் வேப்பம்பட்டியில் வசித்து வந்தவர் மணிகண்டன் அவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதியினருக்கும், அதே பகுதியில் வசித்து வந்த பாண்டீஸ்வரன் மற்றும் நிரஞ்சனா தம்பதியினருக்கு இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்துள்ளது.
இந்நிலையில், மணிகண்டன் அவரது மனைவி ராஜேஸ்வரியுடம் இலை அறுப்பதற்காக சென்று கொண்டிருந்துள்ளார். அப்பொழுது அவர்களுக்கு எதிரே வந்த பாண்டீஸ்வரன் மற்றும் நிரஞ்சனா இருவரும் மணிகண்டன் மற்றும் அவருடைய மனைவியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளனர்.
இந்நிலையில் இருவருக்குமிடையே கடுமையான சண்டை ஏற்பட்டுள்ளது. அப்பொழுது ஆத்திரமடைந்த நிரஞ்சனா யாரும் எதிர்பாராதவிதமாக அரிவாளால் மணிகண்டனை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் ரத்தவெள்ளத்தில் துடிதுடித்து மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் நிரஞ்சனாவை தடுக்க முயன்ற ராஜேஸ்வரிக்கும் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலிசார், பலத்த காயமடைந்த ராஜேஸ்வரியை மீட்டு மருத்துவமனக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்த மணிகண்டனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் பாண்டீஸ்வரன் மற்றும் நிரஞ்சனா தம்பதியினர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.