#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
அடேங்கப்பா! இந்த காலத்தில் இப்படியொரு காதலா! அனைவரையும் வியக்கவைத்த பவித்ரா- விக்னேஸ்வரன் ஜோடி! குவியும் வாழ்த்துக்கள்!
தற்காலத்தில் சமூக வலைதளங்களின் மூலம் பலரையும் காதலித்து ஏமாற்றுவது என்பது பெருமளவில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் பவித்ரா மற்றும் விக்னேஸ்வரனின் பேஸ்புக் காதல் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்தவர் பவித்ரா.21 வயது நிறைந்த இவர் டி.பார்ம் படித்துக்கொண்டு இருந்துள்ளார். இவருக்கு பேஸ்புக் மூலம் விக்னேஸ்வரன் என்ற நபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. விக்னேஸ்வரன் பிசிஏ முடித்துவிட்டு வீட்டிலிருந்தபடியே ஆன்லைனில் பொருட்கள் விற்பனை செய்யும் வேலை பார்த்து வருகிறார். அவர் 4 அடி உயரம் கொண்டவர். இது ஆரம்பத்தில் பவித்ராவிற்கு தெரியாது.
இந்நிலையில் இவர்களது பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது. அப்பொழுது விக்னேஸ்வரன் தனது உயரத்தை குறித்து கூறுகையில் பவித்ரா உன்னை காதலிக்கிறேன். உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார் மேலும் இதுகுறித்து தனது பெற்றோரிடம் கூறி சம்மதம் கேட்ட நிலையில் விக்னேஷ்வரனை கண்ட அவர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.ஆனால் பவித்ரா அவரை தான் நான் திருமணம் செய்து கொள்வேன் என்று பிடிவாதமாக வீட்டை விட்டு வெளியேறி நண்பர்கள் மற்றும் விக்னேஸ்வரனின் உறவினர்களின் ஆதரவுடன் திருமணம் செய்து கொண்டுள்ளார். அதனைத்தொடர்ந்து கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று தங்களுக்கு அடைக்கலம் கேட்டுள்ளனர்.
இந்நிலையில் இதுகுறித்து விவரமறிந்த பவித்ராவின் உறவினர்கள் அங்கு விரைந்து தங்களுடன் வந்துவிடும்படி பவித்ராவை அழைத்துள்ளனர். ஆனால் பவித்ரா மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த எங்களுக்கு மகளே வேண்டாம் என்று கூறி அங்கிருந்து சென்று விட்டனர். பின்னர் பவித்ரா விக்னேஷ் வீட்டிற்கு சென்றுள்ளார். இந்நிலையில் இந்த காலத்திலும் இப்படி ஒரு காதலா என விக்னேஸ்வரன் மற்றும் பவித்ரா ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.