அண்ணன் கூறிய அந்த ஒத்த வார்த்தை.! கடைசி நேரத்தில் கல்யாணத்தை நிறுத்திய மணப்பெண் ! பரபரப்பு சம்பவம்.!



girl-stop-marriage-for-her-brother-not-like-groom

விருத்தாசலம் பகுதியில் வசித்து வந்த 32 வயது நிறைந்த இளைஞருக்கு சிதம்பரம் பகுதியை சேர்ந்த 21 வயதுமிக்க இளம்பெண் ஒருவருடன் திருமணம் நடைபெற குடும்பத்தினரால் நிச்சயிக்கப்பட்டிருந்தது. மாற்றுத்திறனாளியான மாப்பிள்ளை சென்னை ஐஐடியில் பணிபுரிந்து வருகிறார். மேலும் இவருக்கு ஏற்கனவே திருமணம் நடைப்பெற்று முதல்மனைவி கடந்த 2 வருடங்களுக்கு முன் உயிரிழந்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து திருமணம் அண்மையில் விருத்தாசலம் கொளஞ்சியப்பர் கோயிலில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த இந்நிலையில் மணமகள்- மணமகன் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர்.பின் முகூர்த்த நேரம் நெருங்கிய நிலையில் மணமகள்  மணமேடைக்கு அழைத்து வரப்பட்டுள்ளார்.

இந்நிலையில் மணமகன் குறித்து அறிந்த மணமகளின் அண்ணன், மாப்பிள்ளையை தனக்கு பிடிக்கவில்லை, மீறி திருமணம் செய்தால் தான் உயிரை மாய்த்துக் கொள்வேன் என கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த மணப்பெண் உடனே தனக்கு இந்த திருமணம் வேண்டாம் எனக் கூறி மணமேடையில் இருந்து எழுந்து வந்துள்ளார். பின்னர் உறவினர்கள் எவ்வளவோ கூறியும் அவர் திருமணத்திற்கு ஒப்பு கொள்ளவில்லை.

இதனால் கோவிலில் பரபரப்பான சூழல் ஏற்பட்ட நிலையில் இதுகுறித்து தகவலறிந்த போலீசார் மணமகன்- மணமகள் குடும்பத்தாரை வரவழைத்து பேச்சுவார்த்தை நடத்தி வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.