ஐயோ பாவம்.. பரிதாப நிலையில் கீர்த்தி சுரேஷ்..'அந்த' வீடியோவை பார்த்து உருகிப்போன ரசிகர்கள்.!
இந்தாம்மா ஏய்... இப்படி பண்ணலாமா.? வகுப்பறையில் மாணவிகளின் கொண்டாட்டம்... ஒரு மாணவி எடுத்த விபரீத முடிவு.!
திண்டுக்கல் அருகே பள்ளி வகுப்பறையில் பீர் பாட்டிலோடு மாணவிகள்பர்த்டே பார்ட்டி கொண்டாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. இதனைத் தொடர்ந்து நடவடிக்கை எடுத்த பள்ளியின் தலைமையாசிரியர் சம்பந்தப்பட்ட ஏழு மாணவிகளையும் சஸ்பெண்ட் செய்திருக்கிறார்.
தமிழகத்தில் டாஸ்மாக் எனப்படும் அரசு மதுக்கடைகள் துவங்கப்பட்ட நாளிலிருந்து மது கலாச்சாரம் இங்கு அதிகமாகி வருகிறது. இது முதியவர்கள் மற்றும் இளைஞர்கள் என்றில்லாமல் தற்போது கல்லூரி மற்றும் பள்ளி மாணவ மாணவிகளும் மது பழக்கத்திற்கு அடிமையாகி வருவது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதற்கு முன்பு கல்லூரி மாணவர்கள் வகுப்பறைக்குள் மது அருந்தியவாறு பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தின. தற்போது திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இயங்கி வரும் தனியார் பள்ளியை சேர்ந்த பிளஸ் டூ மாணவிகள் வகுப்பறையில் மது அருந்தி நடனமாடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தங்களது தோழியின் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக கேக் வாங்கி வந்ததோடு பீர் பாட்டிலையும் வாங்கி வந்திருக்கின்றனர். இதனைத் தொடர்ந்து உணவு இடைவேளைக்கு மற்ற மாணவ மாணவிகள் சென்றிருந்த நிலையில் இவர்கள் கேக் வெட்டி மது அருந்தி பிறந்தநாளை கொண்டாடி நடனம் ஆடி இருக்கின்றனர். இந்நிலையில் மற்ற மாணவர்கள் வகுப்பறைக்கு திரும்பி விடவே அவர்கள் இது தொடர்பாக தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் நடவடிக்கையில் இறங்கிய தலைமை ஆசிரியர் 7 மாணவிகளையும் சஸ்பெண்ட் செய்ததோடு அவர்களது பெற்றோரையும் அழைத்து கண்டனங்களை தெரிவித்து இருக்கிறார். மேலும் சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏழு மாணவிகளில் ஒரு மாணவி விஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். தற்போது அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.