53 வயதில் கூட தபூ செம்ம ஹாட்டா இருக்காங்க.?! வைரல் போட்டோஷூட்.. இளம் நடிகைலாம் ஓரம்போங்க.!
அறைக்குள் சென்று கதவை சாத்திய மகள்! சந்தேகத்தில் ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்த தாயார் கண்ட அதிர்ச்சி காட்சி!
நாகர்கோவில் நித்திரவிளை அருகே பூத்துறை காருண்யபுரம் பகுதியில் வசித்து வருபவர் ராஜி. இவரது மகள் வனஜா. ௧௮ வயது நிறைந்த இவர் அப்பகுதியில் உள்ள கல்லூரி ஒன்றில் பி.ஏ. முதலாம் ஆண்டு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் வனஜா தனது கல்லூரியில் விளையாட்டு விழா நடைபெறுவதாகவும் அதற்கு பணம் வேண்டும் எனவும் தனது பெற்றோரிடம் கேட்டுள்ளார். ஆனால் அவரது பெற்றோர் பணம் தர மறுப்பு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் வனஜா அவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு மனவருத்தத்துடன் காணப்பட்டுள்ளார். இந்நிலையில் தனது தாய் மட்டும் வீட்டில் இருந்த நிலையில் வீட்டின் அறைக்குள் சென்று கதவை பூட்டிக்கொண்ட வனஜா நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இந்நிலையில் வெகு நேரமாகியும் கதவு திறக்காததால் சந்தேகமடைந்த அவரது தாயார் ஜன்னலை திறந்து உள்ளே பார்த்துள்ளார். அங்கு மின்விசிறியில் தூக்கிட்டு தொங்கியுள்ளார்.
அதனை தொடர்ந்து கதவை உடைத்து உள்ளே சென்ற அவர் தனது மகளை மீட்டு மருத்துவமனைக்கு தூக்கி சென்றுள்ளார். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இதுகுறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.