மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கதவை தாழிட்டு மாணவி செய்த காரியத்தால் அதிர்ந்துபோன பெற்றோர்.!!
தமிழ்நாட்டிலுள்ள, கோயம்பத்தூர் மாவட்டத்தின் சூளுரை சேர்ந்த மோகனபிரியா என்ற பன்னிரண்டு வயது மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூலூரைச் சேர்ந்தவர் பிரதீப். இவரது மகள் தான் மோகனப்பிரியா. இவருக்கு பன்னிரண்டு வயது. இவர் அதே பகுதியில் உள்ள பள்ளி கூடம் ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்தநிலையில் இவருக்கு நேற்று பள்ளி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால் அவர் பள்ளி செல்லாமல் வீட்டில் இருந்துள்ளார். அப்போது அவரது அம்மா வீட்டை சுத்தம் செய்ய கூறியுள்ளார். ஆனால் அவர் அறைக்குள் சென்று கதவை தாழிட்டு கொண்டுள்ளார்.
இந்நிலையில், உள்ளே சென்ற மகள் வெகுநேரமாகியும் வெளிய வராததால் சந்தேகம் அடைந்த பெண்ணின் பெற்றோர் ஜன்னல் வழியாக எட்டி பார்த்தனர். அப்போது அறைக்குள் மோகனப்பிரியா தூக்கில் தொங்கி கொண்டிருந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பெண்ணை மீட்டு சிகிச்சைக்காக சூலூர் தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்னர், அங்கு மோகனப்ரியாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறிவிட்டனர். மாணவி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.