மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிழட்டு காமுகன்.. பதறவைக்கும் செயல்.. போக்ஸோவில் கைது.!
3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காமுகனை காவல்துறையினர் போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்துள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தட்டாங்குட்டை பகுதியில் வசித்து வரும் தம்பதிகளின் 5 மற்றும் 7 வயதான இரண்டு மகள்கள், அதே பகுதியில் வசித்து வந்த 10 வயது சிறுமியுடன் விளையாடியுள்ளார்.
அப்போது தெருவில் விளையாடிக்கொண்டிருந்த மூன்று சிறுமிகளிடமும், அதே பகுதியில் வசித்து வந்த பனியன் நிறுவன தொழிலாளி கணேசன் என்பவர் நைசாக பேச்சு கொடுத்து, மிட்டாய் வாங்கித் தருவதாக வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதனைத் தொடர்ந்து மூன்று சிறுமிகளையும் வீட்டிற்குள் அடைத்து, அவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.மேலும், 'இதனை யாரிடமாவது வெளியே கூறினால் கொன்றுவிடுவேன்' என்று மிரட்டிய நிலையில், பாதிக்கப்பட்ட மூன்று சிறுமிகளில் ஒருவர் தனது தந்தையிடம் இது குறித்து தெரிவித்துள்ளார்.
இதனைக்கேட்டு அதிர்ந்து போன தந்தை அவிநாசி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்த நிலையில், கணேசனை காவல்துறையினர் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், சிறுமிகளுக்கு அவர் பாலியல் தொல்லை அளித்ததை ஒப்புக்கொண்ட நிலையில், போக்சோ சட்டத்தின் கீழ் அவர்மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்த காவல்துறையினர் திருப்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தனர்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, கணேசனை காவல்துறை கண்காணிப்பில் வைக்க உத்தரவிட்டதை தொடர்ந்து, அவரை சிறையில் அடைத்துள்ளனர். அத்துடன் மூன்று சிறுமிகளுக்கு பனியன் தொழிலாளி ஒருவர் பாலியல் தொல்லை கொடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.