திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கிணற்றில் விழுந்த ஆட்டை காப்பாற்ற சென்ற நபருக்கு நேர்ந்த கொடூரம்!
திருப்பத்தூர் மாவட்டம் நாற்றம்பள்ளியை சேர்ந்த பணக்கார வட்டத்தை சேர்ந்தவர் பாலாஜி. எலக்ட்ரீசியனாக வேலை செய்து வரும் இவர், தனது வீட்டில் 20 ஆடுகளை வளர்த்து வந்துள்ளார். இதனிடையே பாலாஜி தினமும் காலையில் சிறிது நேரம் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம் போல் ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற போது, ஒரு ஆடு மட்டும் தவறி கிணற்றில் விழுந்துள்ளது. இதனையடுத்து பாட்டை நீக்கி நினைத்த பாலாஜி உடனடியாக கயிறு கட்டி கிணற்றில் இறங்க முயன்றார்.
அப்போது திடீரென எதிர்பாராத விதமாக கயிறு அறுந்து கிணற்றில் விழுந்த பாலாஜி கல் மீது விழுந்து, தலையில் பலத்த காயமடைந்த பாலாஜி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து விரைந்து வந்த நாற்றம்பள்ளி தீயணைப்புத் துறையினர் பாலாஜியின் உடலை மீட்டு போலீசில் ஒப்படைத்தனர்.
இதனையடுத்து பாலாஜி உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.