திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ரூ. 2.50 இலட்சம் மதிப்பிலான ஆடுகள் வெறிநாய் கடித்து உயிரிழப்பு.. கொட்டகைக்குள் புகுந்து வெறிச்செயல்.. கண்ணீரில் உரிமையாளர் .!
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள காங்கயம், காத்தாங்கன்னி பகுதியில் வசித்து வருபவர் நாகராஜ். இவர் விவசாயி ஆவார். தனது வீட்டில் 35 ஆடுகளை கொட்டகை அமைத்து வளர்த்து வருகிறார்.
இந்நிலையில் இவை கொடூரமாக உயிரிழந்து கிடந்துள்ளன. இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்தவர் ஆடுகளின் மரணத்திற்கான காரணம் குறித்து சோதனை செய்கையில், வெறிநாய் தாக்குதலில் ஆடுகள் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளார்.
இந்த சம்பவத்தில் தற்போது ரூ.2,50,000 மதிப்பிலான ஆடுகள் உயிரிழந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. காயத்துடன் இருக்கும் ஆடுகளுக்கு கால்நடை மருத்துவர் மூலமாக சிகிச்சையளிக்கப்பட்டு வரும் நிலையில், தகவல் அறிந்த வருவாய் குழுவினரும் நேரில் வந்து பார்வையிட்டு இருக்கின்றனர்.
சமீபகாலமாகவே நாய்கள் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், நாய்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.