திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
சுவையான பேரீச்சம்பழ பாக்கெட்.. ஆனால்.. பிரித்து பார்த்தபோது காத்திருந்த அதிர்ச்சி..
பேரிச்சம்பழம் பாக்கெட்டில் இருந்து சுமார் 15 லட்சம் மதிப்பிலான தங்கம் சென்னை விமானநிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அரபு நாடுகளில் இருந்து இந்தியாவிற்கு தங்கம் கடத்திவரும் சம்பவம் சமீபகாலமாக தொடர்ந்து நடந்துவருகிறது. இந்நிலையில் சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் இருந்து எமிரேட்ஸ் விமானம் மூலம் நபர் ஒருவர் சென்னை விமான நிலையத்திற்கு வந்துள்ளார்.
வழக்கமான சோதனையில் ஈடுபட்டிருந்த சுங்கத்துறை அதிகாரிகள், அந்த நபர் கொண்டுவந்த உடமைகளை சோதனை செய்தனர். அப்போது அவர் கொண்டுவந்த பேரிச்சம்பழம் பாக்கெட் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. உடனே அந்த பேரிச்சம்பழம் பாக்கெட்டை பிரித்து பார்த்தபோது அதில் 295 கிராம் எடையுடைய சுமார் ரூ.15.26 லட்சம் மதிப்பிலான தங்கம் கடத்திவரப்பட்டது தெரியவந்தது.
இதனை அடுத்து அந்த தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதனை கடத்திவந்த மர்மநபரையும் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர். சினிமாவை மிஞ்சிய இந்த கடத்தல் சம்பவம் அதிகாரிகளையே அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.