திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து., தடுப்பில் மோதி விபத்து! 20க்கும் மேற்பட்டோர் காயம்!!
விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தை அடுத்த பிள்ளைச் சாவடி கிழக்கு கடற்கரை சாலையில், பயணிகளுடன் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்துள்ளது.
இதனால் நிலை தடுமாறிய அரசு பேருந்து சாலையின் நடுவே அமைக்கப்பட்ட தடுப்பில் மோதி விபத்துக்குள்ளானது. எதிர்பாராவிதத்தில் நடந்த இந்த விபத்தினால் பயணிகளுக்கிடையே பெரும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், இந்த பேருந்தில் பயணம் செய்த 20க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனை தொடர்ந்து, ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் பேருந்தை இயக்கியதால் விபத்து என முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.