அரசு ஊழியர்கள் திடீர் சாலை மறியல்.! குண்டுக்கட்டாக தூக்கி சென்ற போலீசார்.!



government-employees-arrested-for-protesting

சென்னையில் போராட்டம் செய்த அரசு ஊழியர்கள் நூற்றுக்கணக்கானோர் கைது.

தமிழக அரசு ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து குறிப்பாக பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று  அரசு ஊழியர்கள்  போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தநிலையில், இன்று அனைத்துச் சங்கங்கள் சார்பில் சென்னை கோட்டையை நோக்கி பேரணி நடத்த முயன்ற போது தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் சிலர் திடீரென போலீஸ் பாதுகாப்பை மீறி தலைமைச் செயலகத்தை முற்றுகையிட முயன்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

protest

அங்கு போராட்டம் நடத்தியவர்களில் சிலரை மட்டும் போலீஸார் முதலமைச்சர் ஊரில் இல்லாததால் தலைமைச் செயலரிடம் அழைத்துச் செல்வதாக தெரிவித்தனர். இந்நிலையில் போரட்டத்தில் ஈடுபட்டவர்கள் போலீஸ் தடுப்பை தள்ளிக்கொண்டு கோட்டையை நோக்கி ஊர்வலமாக செல்ல முயன்றனர். இதனால் அந்த அந்த பகுதியில் போக்குரவத்து பாதிக்கப்பட்டது. 

இதனையடுத்து, அவர்களை அப்புறப்படுத்த முயன்ற போலீசாருக்கும், ஊழியர்களுக்கும் இடையே லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.  இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் அருகிலுள்ள திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.