மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
தமிழக ஆளுநரின் உதவியாளருக்கு கொரோனா! தனிமைப்படுத்திக்கொண்ட ஆளுநர்!
கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளில் பரவி பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. தமிழகத்திலும் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை மற்றும் கொரோனாவால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
கொரோனா சமயத்தில் பொதுமக்களுக்கு உதவி செய்யும் வகையில் ஆரம்பத்திலிருந்து சுகாதாரத்துறையினர், அரசு பணியாளர்கள், தன்னார்வலர்கள், அரசியல் கட்சியினர் ,என பல்வேறு தரப்பில் களத்தில் இறங்கி உதவி செய்து வருகின்றனர். இந்தநிலையில், களத்தில் பணியாற்றும் நபர்களுக்கு கொரோனா உறுதியாகி வந்தது.
இந்தநிலையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உதவியாளர் தாமஸூக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆளுநர் மாளிகையில் உள்ள பாதுகாப்பு வீரர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 84 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக ஆளுநரின் உதவியாளருக்கு கொரோனா உறுதியானதால் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித் நலமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.