மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார்..! ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம்.!
சென்னை கலைவாணர் அரங்கில் சட்டமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டு தொடக்கத்திலும் தமிழக சட்டசபை கூடும்போது கவர்னர் வந்து உரையாற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் முதல் சட்டசபை கூட்டம் இன்று கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது.
காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. முதலில் தமிழ் தாய் வாழ்த்து படப்பட்டதும், பிறகு வணக்கம் என தமிழில் சொல்லி உரையை தொடங்கினார் கவர்னர் ஆர்.என்.ரவி. அதன்பின்னர், கவர்னர் தனது உரையை ஆங்கிலத்தில் தொடர்ந்தார்.
அதில், இந்தியாவிலேயே சிறந்த முதலமைச்சராக ஸ்டாலின் இருக்கிறார். எங்கும் தமிழ், எதிலும் தமிழ்.. என்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. கொரோனா 2 வது அலையை சிறப்பாக கையாண்டதற்கு முதல்வருக்கு பாராட்டுகள். முதல்வரின் முயற்சியால் தடுப்பூசி செலுத்துவது மக்கள் இயக்கமாக மாறியுள்ளது.
குழந்தைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, கொள்கைகள் வகுத்து தமிழ்நாடு அரசு செயல்படுகிறது. தெற்காசியாவில் அதிக முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக, தமிழ்நாடு அரசு திகழ்கிறது என்று ஆளுநர் உரையாற்றி வருகிறார்.