திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
1 ஆண் குழந்தை மற்றும் 6 பெண் குழந்தைகள் விற்பனை.. அரசு பெண் மருத்துவர் சஸ்பெண்ட்... 2 பேர் கைது.!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் ஆறு பெண் குழந்தைகளை விற்பனை செய்த விவகாரம் தொடர்பாக அரசு மருத்துவமனையின் பெண் மருத்துவர் அனுராதா சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்கும் விவகாரம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக லோகாம்பாள் என்பவரும் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டை சேர்ந்த தினேஷ் என்பவரது மனைவிக்கு மூன்றாவதாக பெண் குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தையை விற்க வற்புறுத்தியதாக தினேஷ் கொடுத்த புகாரின் பேரில் லோகாம்பாள் என்பவரை காவல் துறையினர் கைது செய்தனர். லோகாம்பாள் மருத்துவர் அனுராதாவின் வற்புறுத்தலில் தான் தினேஷிடம் அவரது மகளை விற்பனை செய்யும்படி வற்புறுத்தியதாக பரபரப்பு வாக்குமூலம் அளித்திருந்தார்.
இது தொடர்பாக மருத்துவர் அனுராதா மற்றும் லோகாம்பாள் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இது குறித்து வாக்குமூலம் அளித்திருக்கும் அனுராதா திருச்செங்கோடு மருத்துவமனையில் மகப்பேறு மருத்துவராக பணியாற்றி வந்ததாக தெரிவித்துள்ளார்.
மேலும் தனியார் மருத்துவமனை ஒன்றும் தான் நடத்தி வருவதாகவும் தெரிவித்த அவர் அதிக பணம் கிடைக்கும் என்பதற்காக குழந்தைகளை விற்றதாக தெரிவித்திருக்கிறார். தனலட்சுமி என்ற பெண்மணி கருக்கலைப்பு செய்வதற்காக தனது மருத்துவமனைக்கு வந்ததாகவும் அவரை சமாதானப்படுத்தி அவருக்கு பிறந்த ஆண் குழந்தையை விற்பனை செய்த போது 3 லட்ச ரூபாய் கிடைத்ததால் பண ஆசையில் இது போன்ற செயலில் தொடர்ந்து ஈடுபட்டதாகவும் தெரிவித்துள்ளார். இவரை சஸ்பெண்ட் செய்து மாவட்ட மருத்துவ நிர்வாகி அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.