திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
திடீரென சிறுமியின் வயிறு பெரிதானதால் அதிர்ச்சியான உறவினர்கள்! நடந்தது என்ன?
பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் தொல்லை மற்றும் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டேதான் வருகிறது. அரசும் இதனை தடுக்க பலவிதமான முயற்சிகள் செய்தும், தண்டனைகளை கடுமையாக்கியும் இதுபோன்ற சம்பவங்கள் நடக்கத்தான் செய்கிறது.
இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு படித்து வரும் மாணவி தனது அத்தை வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். தாய், தந்தை இருவரையும் இழந்த அந்த பெண் தனது அத்தை வீட்டில்தான் தங்கியுள்ளார்.
இந்நிலையில் அவ்வப்போது தனது தாத்தா கருப்பையா வீட்டிற்கு டிவி பார்ப்பதற்காக சென்றுள்ளார் அந்த சிறுமி. இதனை தனக்கு சாதகமா பயன்படுத்திக்கொண்ட கருப்பையா அந்த சிறுமியை பலநாட்களாக பாலியல் வன்கொடுமை செய்துவந்துள்ளார்.
சிலநாட்களாக உடல் சோர்வாகவும், வயிற்றுவலியால் துடித்து வந்துள்ளார் சிறுமி. நாளடைவில் சிறுமியின் வயிறு பெரிதானதை அறிந்த சிறுமியின் அத்தை சிறுமியிடம் விசாரிக்க அந்த சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார். பின்னர் இதுகுறித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு கருப்பையா கைது செய்யப்பட்டார்.
பின்னர் சிறுமியை மறுவர்களிடம் சோதித்தபோது சிறுமி 5 மாத கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.