மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
15 சிறுமியிடம் அத்துமீறிய தாத்தாக்கள்.. தட்டித் தூக்கிய போலீசார்!
திருவண்ணாமலை அருகே 15 வயது சிறுமியிடம் அத்துமீறிய 2 தாத்தாக்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருவண்ணாமலை அருகிலுள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த பரிந்து வயது சிறுமி அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இதில் சிறுமியின் தந்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த நிலையில், தாயின் அரவணைப்பில் வளர்ந்து வந்துள்ளார்.
இதில், குடும்பத்தின் வறுமையால் சிறுமியின் தாய் வெளியூரில் தங்கி வேலை செய்து வந்துள்ளார். இதனால் சிறுமி தாத்தா பாட்டியுடன் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த கிராமத்தில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகம் சார்பில் பாலியல் சீண்டல்கள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் நல அலுவலர் பெண் குழந்தைகளுக்கு நம்மிடம் பழகும் ஆண் நண்பர்கள் எந்த எண்ணத்தில் பழகுகிறார்கள் என்றும், குட் டச், பேட் டச் குறித்து விளக்கியுள்ளனர். மேலும் உங்களிடம் யாராவது பேட் டச் செய்தால் உங்களுடைய தாயிடம் கூற வேண்டும் அல்லது நாங்கள் அளிக்கும் புகார் எண்ணிற்கு தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.
அப்போது கூட்டத்தில் இருந்த 14 வயது சிறுமி ஒருவர் அதிகாரிகளிடம் சென்று என்னுடைய தாத்தாக்கள் பள்ளி விடுமுறை நாட்களில் வீட்டில் தனியாக இருக்கும் போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதாக கூறியுள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் நல்ல அலுவலர்கள் அந்த சிறுமியை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
மேலும் அந்த சிறுமி கொடுக்க தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தியதில், 2 தாத்தாக்களும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்கள் இருவர் மீதும் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் கைது செய்துள்ளனர்.