மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
பட்டபகலில் மூதாட்டியின் முகத்தில் ஸ்பிரே அடித்து 7 1/2 பவுன் நகையை பறித்த இளம்பெண் கைது...
கோவை ரத்தினபுரி ரங்கண்ணா கவுண்டர் நகரை சேர்ந்தவர் சந்திரமோகன் - செல்வராணி தம்பதியினர். இவர்கள் தண்டு மாரியம்மன் கோவில் அருகே பரிசு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்துள்ளார். சந்திரமோகன் கடையில் இல்லாத சமயத்தில் செல்வராணி கடையை கவனித்து வந்துள்ளார்.
சம்பவத்தன்று செல்வராணி கடையை கவனித்து வந்துள்ளார். அப்போது இளம்பெண் ஒருவர் கடைக்கு வந்து மூதாட்டியிடம் பரிசு பொருட்களை காட்டும் படி கூறியுள்ளார். அவரும் பரிசு பொருட்களை காண்பித்துள்ளார். கடைசியாக ஒரு பொருளை தேர்வு செய்து பேக் செய்யுமாறு கூறியுள்ளார்.
அதனையடுத்து அந்த பொருளை செல்வராணியும் பேக் செய்ய சென்றுள்ளார். அந்த சமயத்தில் அந்த இளம்பெண் செல்வராணியின் அருகில் வந்துள்ளார். அவரும் பொருளை தான் பார்க்க வருகிறார் என்று எண்ணியுள்ளார் செல்வராணி.
ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக அந்த இளம்பெண் தான் மறைத்து வைத்திருந்த கரப்பான் பூச்சி ஸ்பிரேயை எடுத்து செல்வராணியின் முகத்தில் அடித்தார். இதனால் நிலைதடுமாறிய செல்வராணி கீழே விழுந்தார். அதனை பயன்படுத்தி அந்த இளம்பெண் செல்வராணியின் கழுத்தில் இருந்த 7 1/2 பவுன் நகையை அடித்து சென்றுள்ளார்.
நிலை தடுமாறி கீழே விழுந்தாலும் அந்த பெண்ணை விடாப்பிடியாக கத்திக் கொண்டே துரத்தி சென்றுள்ளார். அவரின் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை பிடித்து ரத்தினபுரி போலீசில் ஒப்படைத்தனர்.