#BiGBreaking : பிரபல இயக்குனர் மரணம்.. சமீபத்தில் பிறந்த நாள் கொண்டாட்டம்.!
பெரும் சோகம்.. பாத்ரூம் பக்கெட் நீரில் மூழ்கிய 10 மாத குழந்தை.. கதறி துடித்த பெற்றோர்..!
பெரம்பூர் வில்லிவாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ரவிக்குமார் - மேரி தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி ஓராண்டுகள் ஆன நிலையில் பத்து மாதமேயான ரிஷிகா என்ற பெண் குழந்தை ஒன்று உள்ளது.
இந்நிலையில் நேற்று முன்தினம் ரவிக்குமார் வேலை சம்பந்தமாக வெளியே சென்றுள்ளார். அப்போது வீட்டில் மேரி மற்றும் அவரது குழந்தை ரிஷிகா ஆகியோர் மட்டுமே தனியாக உறங்கிக் கொண்டிருந்துள்ளனர். சிறிது நேரத்தில் மேரி கண் விழித்துப் பார்த்தபோது குழந்தை ரிஷிகாவை காணவில்லை. இதனால் பதிறிப்போன மேரி அக்கம் பக்கத்தில் தேடி உள்ளார்.
அப்போது காணாமல் போன குழந்தை ரிஷிகா பாத்ரூமில் இருந்த பக்கெட் நீரில் தவறி விழுந்து உயிரிழந்து கிடந்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த குழந்தையின் தாய் மேரி குழந்தையை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். ஆனால் அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ரிஷிகா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறியுள்ளனர். மேலும் பிறந்து பத்து மாதமேயான குழந்தை நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.