திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
மெரினா போராட்டத்தில் மது, மாது ஆறாக ஓடியது! எச்.ராஜா மீண்டும் சர்ச்சை பேச்சு!
சில தினங்களுக்கு முன்பு புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடந்த விநாயகர் சிலை ஊர்வலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எச்.ராஜா போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஐகோர்ட்டை விமர்சித்து பேசினார். இவரது ஆவேச பேச்சு வைரலாக பரவியது. இதனை தொடர்ந்து திருமயம் போலீசார் எச். ராஜா மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்து உள்ளனர்.
தலைமறைவாக உள்ள H ராஜாவை போலீசார் தேடி வருகின்றனர். இந்நிலையில் மீண்டும் சர்ச்சை கருத்துக்களை கூறி மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார் எச். ராஜா. மெரினா புரட்சி பற்றியும், அங்கு நடந்தது ஒரு போராட்டமே அல்ல என்பது போலவும் பேசியுள்ளார் எச். ராஜா.
இதுபற்றி அவர் பேசுகையில் மெரினா போராட்டம் ஒரு புரட்சி அல்ல, அங்கு சேலை கட்டிய பெண்களுக்கு அனுமதி தரப்படவில்லை என்றும் மேலும் போராட்டத்தின் போது மது, மாது, பீப் ஆகிவை ஆறாக ஓடியதாகவும் எச். ராஜா தெரிவித்துள்ளார்.
இவரது இந்த பேசிச்சிருக்கு பலரும் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்.