திரிஷாவுடன் ஸ்டைலிஷ் லுக்கில் தல அஜித்.. படக்குழு வெளியிட்ட அசத்தல் கிளிக்ஸ் வைரல்.!
ஹேப்பி நியூஸ்... குடும்ப தலைவிக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை... இன்று முதல் விண்ணப்பம் வெளியீடு!!
தமிழகத்தில் திமுக கொடுத்த தேர்தல் வாக்குறுதியான குடும்ப தலைவிக்கான 1000 ரூபாய் உரிமைத்தொகை எப்போது வரும் என மக்கள் எதிர்பார்த்திருந்த நிலையில் இன்று முதல் அதற்கான விண்ணப்பம் வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. மேலும் மகளிர் உரிமை தொகை திட்டம் செப்டம்பர் 15ம் தேதி முதல் தொடங்க உள்ளது.
குடும்ப அட்டையில் உள்ள தகவலை வைத்து குடும்பத்தில் உள்ள ஒரு பெண்ணுக்கு மட்டும் மாதம் ரூபாய் 1000 வழங்க உள்ளது. இன்று முதல் மகளிர் உரிமைத்தொகை பெற்று கொள்வதற்கான விண்ணப்பப்படிவம் விநியோகம் செய்யப்பட உள்ளது. விண்ணப்பம் வழங்கப்படும் போதே விண்ணப்பத்துடன் விண்ணப்பப்பதிவு மேற்கொள்ளும் இடம், நாள், நேரம் ஆகியவை அடங்கிய டோக்கனும் இணைத்து வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாள், நேரங்களில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட முகாம்களுக்கு சென்று விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ஆண்டு வருமானம் 2.5 லட்சத்துக்கு கீழ் இருக்க வேண்டும். 5 ஏக்கருக்கு குறைவாக நன்செய் அல்லது 10 ஏக்கருக்கு குறைவான புன்செய் நிலம், ஆண்டுக்கு 3,600 யூனிட்டுக்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்களுக்கு மகளிர் உரிமைத்தொகை கிடையாது என்ற பல்வேறு கட்டுப்பாடுகள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.