அடேங்கப்பா.. நடிகர் மாதவன் வாங்கியுள்ள காஸ்ட்லி சொகுசு படகு.! விலையை கேட்டு வாயை பிளந்த ரசிகர்கள்!!
8 வயது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் கைது!
தூத்துக்குடி அருகே 8 வயது பள்ளி மாணவிகளுக்கு பாலியல் கொடுத்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் அருகே உள்ள கோவிந்தாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியில் அதே கிராமத்தை சேர்ந்த மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தப் பள்ளியில் தூத்துக்குடி அருகே மறவன் மடம் பகுதியை சேர்ந்த ஜான்சன் என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இந்த நிலையில் தலைமையாசிரியர் ஜான்சன் அந்த பள்ளியில் படிக்கும் இரு சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக பாதிக்கப்பட்ட சிறுமிகளின் பெற்றோர், கடம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
அந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தலைமை ஆசிரியர் ஜான்சனிடம் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் ஜான்சன் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து போகோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஜான்சனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.