மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
#Alert: அடுத்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் 16 மாவட்டங்களில் கனமழை... மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழ்நாட்டில் இன்று 16 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது குறித்த செய்திக்குறிப்பில், நாளை முதல் வரும் மே 31 வரை தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் எனவும், சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மே 29, 30 போன்ற நாட்களில் குமரிக்கடல், தென் தமிழக கடலோரப் பகுதிகளில் சூறைகாற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.