சிம்பிளாக நடந்து முடிந்த பிக்பாஸ் பிரதீப் திருமணம்.! பொண்ணு யார் தெரியுமா?? வைரலாகும் புகைப்படம்.!
#RainAlert: தமிழகத்தில் அடுத்த 24 மணிநேரத்தில் கொட்டித்தீர்க்கும் கனமழை..! எந்தெந்த மாவட்டங்களில் தெரியுமா?..! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!
வெப்பச்சலனத்தின் காரணமாக தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுச்சேரி போன்ற பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்ககடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனத்தின் காரணமாக தமிழ்நாடு, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று திருப்பூர், தேனி, நீலகிரி, கோயம்புத்தூர், திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, நாமக்கல் போன்ற மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரள கடலோர பகுதிகள், லட்சத்தீவு பதவிகள், குமரி கடல், தென்கிழக்கு அரபிக்கடல், மன்னார் வளைகுடா, தமிழக கடலோர பகுதிகளில் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வரையிலும் பலத்தகாற்று வீசக் கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.