தன் வீட்டில் நடந்த மோசமான சம்பவம்.! நடிகை சீதா போலீசில் பரபரப்பு புகார்.! நடந்தது என்ன?
உஷாரா இருங்க.. தமிழகத்தின் இந்த மாவட்டங்களில் இன்று கொட்டித்தீர்க்கும் மிக கனமழை..! வானிலை மையம் எச்சரிக்கை..!!
வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பான செய்தித்தொகுப்பில், தமிழ்நாடு, காரைக்கால் மற்றும் புதுவை பகுதிகளில் அநேக இடங்களில் இடிமினலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இன்று சேலம், பெரம்பலூர், திருச்சி, நாமக்கல் மற்றும் கள்ளக்குறிச்சியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், அரியலூர், கரூர், தஞ்சாவூர், ஈரோடு, கடலூர், புதுக்கோட்டை, திருவாரூர், சிவகங்கை மற்றும் நீலகிரி, இராமநாதபுரம், கோயம்புத்தூர், தேனி, திருப்பூர், திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்து 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒரு சில இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலையானது 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையானது 27-28 அளவில் இருக்கக்கூடும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கையாக, தெற்கு வங்க கடலில் மத்திய பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.