35 நாட்கள்.. பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய சுனிதா உருக்கமாக போட்ட முதல் போஸ்ட்.!
கன மழை எதிரொலி!.. 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை: வெளியான அறிவிப்பு..!
தென்கிழக்கு வங்கக் கடலில் கடந்த 5 ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் படிப்படியாக வலுப்பெற்று புயலாக உருவெடுத்தது. கடந்த 8 ஆம் தேதி சென்னைக்கு தென்கிழக்கே 350 கி.மீ தூரத்தில் மையம் கொண்டிருந்த மாண்டஸ் புயல் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சென்னைக்கும் புதுச்சேரிக்கும் நடுவே மாமல்லபுரம் அருகே கரையை கடந்தது.
மாண்டஸ் புயல் கரையை கடந்த பின்னர் கடந்த 2 நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், தென்கிழக்கு வங்கக்கடலில் மாண்டஸ் புயல் உருவான அதே பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. சில இடங்களில் கன மழையும் பெய்து வரும் நிலையில் 4 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
அதன்படி திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.