இடி மின்னலுடன் பொளக்கப்போகும் கனமழை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!



heavy rainfall alert for tamilnadu

சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழகத்தின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக 16 ஆம் தேதியான இன்று தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. 

17 ஆம் தேதியை பொறுத்தவரையில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது. 

chennai

சென்னையை பொறுத்தவரையில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் அதிகபட்ச வெப்பநிலையாக 36 டிகிரி செல்சியசும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 28 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். 

மீனவர்களுக்கான எச்சரிக்கையாக 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை வடக்கு ஆந்திர கடலோர பகுதி, குமரி கடல், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டி உள்ள தென் தமிழக கடலோரப் பகுதிகளில் பலத்த சூறாவளி காற்று மணிக்கு 40 கிலோமீட்டர் வேகம் முதல் 60 கிலோமீட்டர் வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம்" என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.