உங்கள் மருமகளை வரவேற்க வேறொருவர் மகளை கொன்றுவிட்டீர்கள்! அதிமுக பிரமுகருக்கு உயர்நீதிமன்றம் கண்டனம்!



high-court-condemns-to-subasree-case

சென்னை பள்ளிக்கரணை அருகே சில தினங்களுக்கு முன்பு சாலையின் நடுவே திருமண வரவேற்பிற்காக வைக்கப்பட்ட பேனர் கீழே விழுந்ததில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த சுபஸ்ரீ என்ற இளம்பெண் நிலை தடுமாறி கீழே விழுந்து, பின்னால் வந்து கொண்டிருந்த தண்ணீர் லாரி அந்த இளம்பெண் மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் ஒட்டுமொத்த தமிழக மக்களையும் சோகத்தில் ஆழ்த்தியது.

suba sree

இந்தவழக்கில் அதிமுக பிரமுகர் ஜெயகோபால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் ஜாமீன் கோரி அதிமுக பிரமுகர் ஜெயகோபால் தொடர்ந்த இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது "உங்கள் வீட்டு மருமகளை வரவேற்க மற்றொரு மகளை கொன்றுவிட்டீர்கள்" என சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது. 

சுபஸ்ரீ மரணத்திற்கு காரணமான பேனர் வைத்ததற்கு நான் கரணம் இல்லை என கூறும் நீங்கள், இரண்டு வாரங்கள் தலைமறைவாக இருந்தது ஏன் என நீதிபதி கேள்வி எழுப்பினார். இந்த வழக்கில் அரசு பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் கேட்டதால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.