கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரம்... தந்தையின் கோரிக்கையை நிராகரித்த உயர்நீதிமன்றம்....



High court rejected for 12 girl father's korikai

கள்ளக்குறிச்சி 12 மாணவி ஸ்ரீமதியின் இறப்பில் மர்மம் இருப்பதாக மாணவியின் தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்‌. இவ்வழக்கு மீதான விசாரணை இன்று உயர்நீதிமன்றத்தில் நடைபெற்றது. அதில் மாணவியின் உடலை மறு கூராய்வு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும் மாணவியின் உடலை 3 மருத்துவர்கள் மறுபிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் உடல் மறுகூராய்வை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மாணவியின் தந்தை மற்றும் தனது வழக்கறிகருடன் உடல் மறு கூராய்வு போது உடனிருக்க அனுமதி வழங்கப்பட்டது.

உடல் கூராய்வுக்கு பிறகு மாணவியின் உடலை எந்தவிதமான எதிர்ப்பும் இன்றி பெற்றுக் கொள்ளவேண்டும் என தந்தைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் மாணவியின் தந்தை ராமலிங்கம் வைத்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.

அதாவது மாணவியின் உடலை மறு கூராய்வு செய்யும் குழுவில் தங்கள் தரப்பு மருத்துவரை சேர்க்க வேண்டும் என மாணவியின் தந்தை ராமலிங்கம் கோரிக்கை வைத்ததை உயர்நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மேலும் கிரிமினல் விவகாரங்களில் தலையிட அதிகாரமில்லை என உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, மோகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.