பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறப்போவது இவர்கள்தான்? வெளியான தகவல்.!
ஓரினச் சேர்க்கையால் ஏற்பட்ட விபரீதம்.. கல்லூரி மாணவர் அடித்து கொலை!
மதுரை மாவட்டம் கடச்சனேந்தல் பகுதியில் வசித்து வருபவர் முகமது ரௌதீன். இவருடைய மகன் பைசல் அப்துல்லா ஒத்தக்கடை அருகே உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இந்த நிலையில் இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு காணாமல் போன நிலையில் போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருந்தது.
இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். அப்போது அழகர் கோவில் மாங்குளம் மலையடி வாரத்தில் கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் பைசல் அப்துல்லாவின் உடல் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார் அவரது உடலை கைப்பற்றி பெரிது பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனிடையே போலீசார் மேற்கொண்ட விசாரணையில் மதுரை ஆத்திகுளத்தில் வசித்து வரும் பாலிடெக்னிக் மாணவர் ஜெயசீலனுடன் தொடர்ந்து இருப்பது தெரியவந்தது.
இந்த நிலையில் இவர்கள் இருவரும் ஆறு மாதங்களாக பழகி வந்த நிலையில், ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளனர். இதனை ஃபைசல் அப்துல்லா தனது செல்போனில் வீடியோவாக எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டு, இதுகுறித்து ஜெயசீலனுக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ஜெயசீலன் ஃபைசல் அப்துல்லாவை தனியாக அழைத்துச் சென்று கீழே தள்ளிவிட்டு, கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதனையடுத்து ஜெயசீலனை கைது செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.