மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
கோர விபத்து..2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து.. 5 பேர் பலியான நிலையில் 50ற்கும் மேற்பட்டோர் படுகாயம்..!
வாணியம்பாடி அருகே உள்ள தேசிய நெடுஞ்சாலையில் பெங்களூரில் இருந்து அரசு பேருந்து ஒன்று வந்துள்ளது. அதற்கு எதிர் திசையில் தனியார் சொகுசு பேருந்து ஒன்றும் வந்துள்ளது.
அப்போது இரண்டு பேருந்துகளும் கண்ணிமைக்கும் நேரத்தில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 5 பயணிகள் சம்பவ இடத்திலேயே பலியாயினர்.மேலும் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 50ற்க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் விபத்தில் சிக்கிய சகப் பயணிகளை மீட்டனர். மேலும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படாதவாறு உ
விபத்துக்குள்ளான பேருந்துகளை அப்புறப்படுத்தினர். இதனையடுத்து இந்த விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.