காந்தாரா 2 திரைப்படம் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வ அறிவிப்பு; கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.!
காதல் விவகாரத்தில் பெண்ணின் 6 உறவினர்களால் வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞர் கொடூர கொலை..!
வாய்பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞர் உறவினராக இருந்தாலும், காதல் விவகாரத்திற்கு சிகப்பு கொடி காண்பித்த பெண்ணின் பெற்றோர் இளைஞரை கொன்று குட்டையில் வீசிய பயங்கரம் நடந்துள்ளது.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கனகபுரா மாவட்டத்தை சேர்ந்தவர் சல்மான் கான் (வயது 23). வாய்பேச இயலாத மாற்றுத்திறனாளி இளைஞரான சல்மான் கான், தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் ராம் நகரில் இருக்கும் உறவினரின் வீட்டில் தங்கிருந்துள்ளார்.
அப்போது, வீட்டில் இருந்த உறவினர் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டு, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இந்த காதல் விவகாரத்தை அறிந்த பெண்ணின் பெற்றோர், பெண்ணுக்கு வேறொரு வரன் பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகளை செய்துள்ளனர். இதனை அறிந்த சல்மான் கான், காதலித்தபோது எடுத்த புகைப்படத்தை காண்பித்து திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள், மற்றொரு வரன் பார்க்கும் முயற்சியில் இறங்கியபோது அதனையும் சல்மான் கான் தொடுத்துள்ளார். இது பெண்ணின் குடும்பத்தினருக்கு உச்சகட்ட ஆத்திரத்தை ஏற்படுத்தவே, கடந்த ஜனவரி 10ம் தேதி அவர் திடீரென மாயமாகினார்.
மகனை காணாது பரிதவித்த சல்மான் கானின் தாய், அவரை கண்டறிந்து தரக்கூறி ஓசூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரை ஏற்ற காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்த நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு கர்நாடகாவில் உள்ள தாவணகெரே ஊர் குட்டையில் இளைஞரின் சடலம் மிதந்தது.
இதுகுறித்து தாவணகெரே காவல் துறையினர் நடத்திய விசாரணையில், அது மாயமான இளைஞர் சல்மான் கானின் உடல் என்பது உறுதியாக, ஓசூர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, அதிகாரிகள் சல்மான் கானின் தாயாருக்கு தகவல் தெரிவித்து, அவர் சடலத்தை தனது மகன் என உறுதி செய்தார்.
அவரை யார் கொலை செய்தார்கள்? என்ற விசாரணையில், காதல் விவகாரத்தில் பெண்ணின் உறவினர்கள் 6 பேர் சேர்ந்து நடத்திய பயங்கரம் அம்பலமானது. இதனையடுத்து, அதில் 4 பேரை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர். 2 பேர் சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.