மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
மரக்கிளையை வெட்டியதால் ஏற்பட்ட தகராறு.. தாய் மற்றும் மகனை வெட்டிய காவலர்!
மயிலாடுதுறை அருகே மரக்கிளையை வெட்டியதால் ஏற்பட்ட தகராறில் தாய் மற்றும் மகனை தாக்கிய காவலர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியை சேர்ந்த மாதவன் என்பவரது வீட்டிற்கு பெயிண்ட் அடிக்கும் பணி நடைபெற்று வந்துள்ளது. இந்த நிலையில் அருகே உள்ள காவலர் கிருபாகரன் என்பவரது வீட்டில் உள்ள கொய்யா மரத்தின் கிளை இடையூறாக இருந்ததால், மாதவன் மரத்தின் கிளைகளை வெட்டியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த காவலர் கிருபாகரன் மண்வெட்டியை எடுத்து வந்து மாதவனையும், அவரை தடுக்க வந்த தாயாரையும் வெட்டியுள்ளார். இதில் பலத்த காயம் அடைந்த இருவரையும் அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் காவலர் கிருபாகரனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.