மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
குழந்தையின்மை பிரச்சனை ஏற்படாமல் இருக்க என்னவெல்லாம் செய்யவேண்டும்? என்னவெல்லாம் செய்யக்கூடாது?
மண் வளம் குன்றி இருந்தால் அங்கு பயிர்கள் வளராது. அதே போல தான் கரு தாங்கும் உடல் அதற்கேற்ற ஆரோக்கியமாக இருந்தால் தான் அந்த உடலில் ஆரோக்கியமான உயிர் உருவாகும். மண்ணை நல்ல இயற்கை உரங்கள் கொண்டு பயன்படுத்துவது போலவே நமது உடலையும் இயற்கை உணவை பயன்படுத்தி நமது உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.
குழந்தையின்மை பிரச்சனை உள்ள கணவன் மனைவி இருவருமே முதலில் உணவை சரி செய்ய வேண்டும். சுத்திகரிக்கப்பட்ட மைதா மாவு, அரிசி, வெள்ளை சீனி, தாவர எண்ணெய்கள், தூள் உப்பு, பதப்படுத்திய உணவுகள் போன்றவற்றை உங்கள் உணவில் இருந்து அறவே ஒதுக்குங்கள். இவற்றில் உள்ள ரசாயனங்கள் ஹோர்மன் கட்டமைப்பை பெரிதும் பாதிக்கும்.
அதேபோல் கடை உணவுகளை அறவே தவிர்த்து விடுங்கள். நார் சத்து உள்ள தானியங்கள், சிறு தானியங்கள், சிவப்பரிசி, காய் கறிகள், பழங்கள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பழங்களை வெறும் வயிற்றில் உண்ணல் வேண்டும். முடிந்தளவு மருந்துக்கள் சேராத நாட்டு பழங்களையும் காய்கறிகளையும் பெற முடிந்தால் மிகவும் நல்லது.
சிறு சிறு உணவுகளாக ஐந்து வேலை உண்ண பழகுங்கள். பழங்களை ஒரு சிறு உணவாக உண்ணுங்கள். அதனோடு வேறு எந்த உணவையும் உண்ண வேண்டாம். பாதாம், பிஸ்தா போன்ற பருப்புக்களை தினமும் உண்ணுங்கள். பத்து நிலக்கடலை, ஐந்து பாதம் இரவில் ஊற வைத்து காலையில் உண்ணுங்கள்.
இரு வேளை ஓமம், சோம்பு, சீரகம், போன்றவற்றை காய்ச்சிய நீரை சிறிது மிளகு சேர்த்து குடியுங்கள். இரவில் நேரத்துக்கு உறங்கி அதிகாலையில் எழும்பும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அவசியம் நடை பயிற்சி மற்றும் யோகா போன்றவற்றை தினமும் இரு வேளை செய்யுங்கள். உட்காரும் அளவை குறைத்து சுறுப்பாக இருங்கள்.
இன்னொரு முக்கிய விஷயம் ஷாம்பு, சோப்பு போன்றவற்றை பாவிப்பதை தவிருங்கள். அதேபோல் பிளாஸ்டிக் உபயோகத்தை தவிருங்கள். இதுவும் ஹோர்மோன் சீர் கெட்டு போக காரணமாக இருக்கின்றது. தண்ணீர் குடிக்கும் பாட்டில் எல்லாம் கண்ணாடி கிளாஸ் அல்லது சில்வர் ஆக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
சலவை தூள் பாவிக்கும் பொழுதும், பாத்திரங்கள் கழுவும் பொழுதும் கையுறை போட்டுக் கொள்ளுங்கள். முடிந்தளவு பாத்திரம் கழுவ இயற்கை பொடிகளை பாவிக்க முயற்சி செய்யுங்கள். கேரட், வெள்ளரி போன்றவற்றை தோல் சீவி விட்டு உண்ணுங்கள். பழங்களை பேக்கிங் சோடாவில் ஊற வைத்து விட்டு பின்னர் நன்றாக கழுவி உண்ணுங்கள்
நன்றாக நீர் அருந்துங்கள். முக்கியமாக மனதை ஆரோக்கியப்படுத்தும் தியானம், நல்ல சிந்தனைகள், நல்ல செய்கைகள் போன்றவையும் அவசியம். ஏனெனில் உடலில் ஹோர்மோன் பிரச்சினைகள் தோன்ற மன அழுத்தமும் முக்கிய காரணமாகின்றது. இவற்றை செய்யும் பொழுது பெண்களின் உடலில் ஏற்படும் ஹோர்மோன்ஸ் பிரச்சினைகள் சீராகின்றது. கருப்பப்பை ஆரோக்கியம் பெறும். ஆணின் உடலும் ஆரோக்கியம் பெறும். இதன் மூலம் கருத்தரிக்கும் வாய்ப்புக்கள் அதிகமாகும்.