மனிதர்களை கேவலப்படுத்திய திரிஷா.?! ஒற்றை பதிவால் கொந்தளிக்கும் ரசிகர்கள்.!
இரவில் உறக்கம் வரவில்லையா?.. இதை ட்ரை பண்ணி பாருங்களேன்., அசந்து தூங்குவீங்க..!
இரவு நேரத்தில் ஆழ்ந்த தூக்கம் ஏற்படாமல் அவதியடைவோரின் எண்ணிக்கை வெகுவாக அதிகரித்து இருக்கிறது. போதுமான உறக்கம் இல்லாதது, உறக்கத்தை தவிர்ப்பது போன்ற காரணத்தால் நமது உடல்நலன் பாதிப்படைகிறது. உடல் பருமன் அதிகரித்து, உடலுக்கு தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படுகிறது.
உறங்க செல்வதற்கு முன்னதாக அதிகளவு கலோரிகள் கொண்ட உனவுகளை சாப்பிட்டால் உறக்கம் விரைவில் ஏற்படாது. சர்க்கரை மற்றும் காபின் பொருட்கள் கலந்த உணவுகளையும் சாப்பிட கூடாது. உறங்குவதற்கு முன்னதாக சாப்பிடவேண்டிய பானங்கள் குறித்து இன்று காணலாம்.
கிரீன் டீயை இரவு நேரத்தில் குடித்தால் உடலுக்கு நல்லது. இதனால் தூக்கம் ஏற்படும். உடலின் எடை மற்றும் தேவையற்ற கொழுப்பை குறைக்க உதவி செய்யும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தி, மன அழுத்தம் மற்றும் கவலையை போக்குகிறது. நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.
உறங்குவதற்கு முன்னதாக பால் குடிக்கும் பழக்கம் குழந்தை பருவத்தில் இருந்து இருக்கும். இது உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை வழங்கும். பாலில் இருக்கும் கால்சியம் மற்றும் டிரிப்டோபன் தூக்கத்திற்கு உதவி செய்கிறது.
அதனைப்போல, இரவில் உறங்க செல்வதற்கு முன்னதாக திராட்சை ஜூஸ் சர்க்கரை சேர்க்காமல் குடிப்பது, சாமந்திப்பூ டீ குடிப்பது உடல் நலத்திற்கும், உறக்கத்திற்கும் நல்லது. இதனால் தூக்கம் வந்து மன அமைதி ஏற்படும், நரம்புக்கு பலம் கிடைக்கும், உடலின் குளுக்கோஸ் அளவு கட்டுப்படுத்தப்படும். திராட்சை ஜூஸ் குடிப்பவர்கள் அதனை வாரம் ஒருமுறை என குடிப்பது நல்லது.