உடலுக்கு சத்துக்களை வாரி வழங்கும் உளுந்து சாதம் செய்வது எப்படி?.. அசத்தல் டிப்ஸ்.!



How to Prepare Ulunthu Sadam or Ulundu Soru 

 

கருப்பு உளுந்து உடலுக்கு பல்வேறு நன்மைகளை வழங்கக்கூடியவை, குறிப்பாக இடுப்பு எலும்புகளுக்கு சத்துக்களை இவை வாரி வழங்கும். உளுந்தை உணவில் சேர்ப்பதால் செரிமானம் அதிகமாகும், ஆற்றல் அதிகரிக்கும், எலும்பு வலிமையாகும், சர்க்கரை நோய் கட்டுப்படும், உரோமத்திற்கு நல்லது, இதய ஆரோக்கியம் மேம்படும். தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களில் உளுந்து சோறு என்பது மிகவும் பிரபலமானது ஆகும். வார இறுதி நாட்களில் மட்டன் சமையலுடன் உளுந்து சாதம் பல வீடுகளில் இன்றியமையாத இடத்தையும் பெறுகிறது. இன்று உளுந்து சோறு செய்வது எப்படி என தெரிந்துகொள்ளலாம்.

தேவையான பொருட்கள்

அரிசி - 3 கப்,
கருப்பு உளுந்து (உடைத்து) - 1 கப், 
வெந்தயம் - 1 1/2 ஸ்பூன்,
சீரகம் - 1 ஸ்பூன், 
பூண்டு - 15 பற்கள்,
தேங்காய் (துருவியது) - 1 கப்,
உப்பு - தேவைக்கேற்ப.

இதையும் படிங்க: இளம்பெண்ணுடன் உல்லாசம்; ஆசைக்கு இணங்காததால் தனிமை வீடியோ லீக்.. தென்காசி இளைஞருக்கு காப்பு.!

செய்முறை

வானெலியில் உளுந்து - வெந்தயம் ஆகியவற்றை தனித்தனியே வறுத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின் உளுந்து, அரிசியை சேர்த்து பாத்திரத்தில் சுமார் 10 - 15 நிமிடம் ஊறவைக்க வேண்டும். 

குக்கரை அடுப்பில் வைத்து, 4 கப் அரிசிக்கு 8 கப் அளவில் தண்ணீர் சேர்க்க வேண்டும். இந்த நீரை பூண்டுடன் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும் நன்கு கொதி வந்ததும், அரிசி, உளுந்தை குக்கரில் சேர்த்து, வெந்தயம் மற்றும் சீரகத்தையும் அதனுடன் இட்டு கலந்துவிடவும்.

பின் தேங்காயை சேர்த்து குக்கரை மூடிவிட வேண்டும். 3 முதல் 5 விசில் வரை வேகவைத்து எடுத்துக்கொள்ளவும். குக்கரில் இருக்கும் அழுத்தம் அடங்கியதும் திறந்தால் சுவையான உளுந்து சோறு தயார். 

இதற்கு தேங்காய் துவையல், எள்ளுத் துவையல், மட்டன் குழம்பு ஆகியவற்றை சேர்த்து சாப்பிடலாம். சுவையாக இருக்கும். 

இதையும் படிங்க: ரூ.200 வேண்டாம்., ரூ.1000 கொடு.. திருநங்கைகள் அடாவடி வழிப்பறி., புதுமணத்தம்பதிக்கு நேர்ந்த சோகம்.!